சர்வதேச ஐஸ் ஹாக்கி போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் அணிகள் பங்கேற்க தடை - சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு
மறு அறிவிப்பு வரும் வரை ரஷியா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு இடைக்கால தடை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்து,
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், ரஷியா மற்றும் பெலாரசை அனைத்து வயது பிரிவிலும் சர்வதேச ஐஸ் ஹாக்கி மற்றும் எல்லை தாண்டிய ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப் படுவதாக சர்வதேச ஐஸ் ஹாக்கி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
மேலும் 2023 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கான உரிமைகளும் ரஷியாவிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருந்த நிலையில் ஐஸ் ஹாக்கி போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The IIHF Council has suspended all Russian and Belarusian national and club teams from IIHF competitions until further notice and withdrew the hosting rights of the 2023 #WorldJuniors from Russia.
— IIHF (@IIHFHockey) February 28, 2022
READ MORE: https://t.co/SpSMGTlZw1#hockey#icehockey#Ukraine#Russia#Belaruspic.twitter.com/YYb1JduvWE
Related Tags :
Next Story