மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்: ஜூலன் கோஸ்வாமி புதிய சாதனை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 March 2022 3:11 PM IST (Updated: 12 March 2022 3:11 PM IST)
t-max-icont-min-icon

ஜூலன் கோஸ்வாமி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

ஹாமில்டன்,

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில்  இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, வெஸ்ட் இண்டீசின் அனிஷா முகம்மதுவை வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 39 வயதான அவர், 5 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி, (2005, 2009, 2013, 2017, 2022)  மொத்தம் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகளில் மொத்தமாக 40 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லின் புல்ஸ்டனின் 34 ஆண்டுகால சாதனையான 39 விக்கெட்டுகளை ஜூலன் கோஸ்வாமி முறியடித்தார்.  


Next Story