ஐபிஎல் ஏலத் தொகையால் சக வீரருடனான நட்பு விஷமாகியது - சைமண்ட்ஸ் பரபரப்பு தகவல்
சக கிரிக்கெட் கிரிக்கெட் வீரர் உடன் நட்பில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பேசியுள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க். நெருங்கிய நண்பர்களாக இருந்த இந்த ஜோடி தேசிய அணியின் பல முக்கியமான வெற்றிகளில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இருப்பினும் 2015 ஆண்டில் கிளார்க்கின் கேப்டன்சி பாணியை கடுமையாக ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் விமர்சித்தார். இது குறித்து அப்போது பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்" 2008 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக நாங்கள் சென்ற போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குடிபோதையில் இருந்தார். குடிபோதையில் தனது நாட்டிற்காக விளையாட வந்தவர் சைமண்ட்ஸ்" என பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தி பிரட் லீ பாட்காஸ்டில் பேசிய சைமண்ட்ஸ், "ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 5.4 கோடி ரூபாய்க்கு டெக்கான் சார்ஜர்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஆனேன்.
ஐபிஎல் தொடங்கியபோது, ஐபிஎல்லில் விளையாடுவதற்கு எனக்கு நிறைய தொகை கிடைத்ததாக மேத்யூ ஹைடன் சுட்டிக்காட்டினார். இதனால் கிளார்க்குக்கு கொஞ்சம் பொறாமை ஏற்பட்டு இருந்ததை அவர் அடையாளம் காட்டினார்.
பணம் வேடிக்கையான விஷயங்களைச் செய்கிறது. அது எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் விஷத்தை உண்டாக்கி இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். இருப்பினும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடனான எனது நட்பு தற்போது நீடிக்கவில்லை " என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story