மீண்டும் களத்திற்கு திரும்பும் ஏபி டிவில்லியர்ஸ்- ரசிகர்கள் உற்சாகம்..!!

டிவில்லியர்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ். அதிரடி ஷாட்களுக்கு பெயர் போன இவர் கிரிக்கெட் உலகின் மிஸ்டர்.360 என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.
38 வயதாகும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து இவர் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த நிலையில் கடந்த வருட ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவரின் ஓய்வு முடிவு இவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இவர் மீண்டும் களத்திற்கு திரும்பவுள்ளார். ஆனால் இம்முறை கிரிக்கெட் களத்திற்கு அல்லாமல் கோல்ப் விளையாட்டில் களமிறங்குகிறார்.
ஜூன் 30 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி சிட்டியில் நடைபெறும் ஐகான்ஸ் சீரிஸ் கோல்ப் நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். ஃபிரெட் ஜோடி தலைமையிலான யுஎஸ்ஏ அணிக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸ் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணியில் களமிறங்குகிறார்.
அவருடன் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையும் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஷ் பார்ட்டி, நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் குத்துச்சண்டை வீரர் ஆஸ்கார் டி லா ஹோயா ஆகியோரும் இந்த தொடரில் யுஎஸ்ஏ அணிக்காக களமிறங்குகின்றனர்.
டிவில்லியர்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story