அமெரிக்க ஓபன்: நடப்பு சாம்பியன் கெர்பர் தோல்வி


அமெரிக்க ஓபன்: நடப்பு  சாம்பியன் கெர்பர் தோல்வி
x
தினத்தந்தி 29 Aug 2017 8:19 PM GMT (Updated: 2017-08-30T01:49:32+05:30)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஆஞ்சலிகா கெர்பர் முதல் சுற்றில் தோல்வியுற்றார்.

நியூயார்க்

ஜப்பானிய பதின் வயது ஆட்டக்காரரான நவோமி ஓசாகா கெர்பரை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்துள்ளார். அமெரிக்க ஓபனில் கடைசியாக முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நடப்பு சாம்பியன் ஸ்வெட்லேனா குஸ்நெட்சோவா ஆவார். அவர் 2005 ஆம் ஆண்டில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். 

ஷரபோவாவின் அதிரடி வருகை

முன்னாள் சாம்பியனான (2006) மரியா ஷரபோவா முதல் சுற்றில் வென்றுள்ளார். தன்னை எதிர்த்து விளையாடிய உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான சிமோனா ஹாலெப்பை 6-4,4-6,6-3 என்ற செட்கணக்கில் வென்றார். சுமார் 3 மணி நேரம் நீடித்த விளையாட்டில் இரண்டாம் செட்டை தவற விட்டாலும் ஷரபோவா மூன்றாம் செட்டில் வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இரண்டாம் சுற்றில் அவர் ஹங்கேரியின் டிமியா பாபோஸை எதிர்கொள்வார். 

ஹாலெப் இதில் வெற்றி பெற்றிருந்தால் உலகின் முதல் தரநிலை வீரராக ஆகியிருப்பார். 


Next Story