வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 10 பேரின் மரண தண்டனை உறுதி டாக்கா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 18, 05:30 AM

விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தை வெளியிட இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகர் விஷால் நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் ‘சக்ரா’. இந்த படத்தின் கதையை, அதன் இயக்குனர் ஆனந்தன் முதலில் என்னிடம் சொன்னார். பின்னர், படமாக்குவதற்கு என்னிடம் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், விஷால் நடிப்பில் சக்ரா படத்தை எடுத்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 17, 09:55 AM

அவதூறு வீடியோ பதிவுகளை வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

பதிவு: பிப்ரவரி 17, 09:50 AM

எம்.டெக். படிப்புகளுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம் ஐகோர்ட்டு யோசனை

எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையையும், அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 09:21 AM

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.

பதிவு: பிப்ரவரி 17, 08:15 AM

0