சினிமா செய்திகள்
டைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறியநடிகை இஷாரா திடீர் திருமணம்

நடிகை இஷாரா துபாயில் வசிக்கும் இந்தியரான சாஹில் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை இஷாரா. இவர் விதார்த்துடன் ‘வெண்மேகம்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பப்பாளி படத்தில் நடித்தார். நட்ராஜ் ஜோடியாக நடித்த சதுரங்க வேட்டை படம் வெற்றிகரமாக ஓடி அவரை பிரபலப்படுத்தியது. எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

படத்தின் காட்சிகளை இயக்குனர் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாகவும் தொட்டு தொட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதன்பிறகு இஷாராவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில் இஷாரா துபாயில் வசிக்கும் இந்தியரான சாஹில் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த வாரம் ரகசியமாக நடந்துள்ளது. 5 நாட்களுக்கு பிறகே திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெளியே தெரியவந்தது.

இனிமேல் சினிமாவில் நடிப்பது இல்லை என்றும், கணவருடன் வெளிநாட்டில் குடியேறுவது என்றும் இஷாரா முடிவு செய்துள்ளார்.