சினிமா செய்திகள்
இளவரசர் ஹரி திருமணத்தில் மணப்பெண் தோழியா; நடிகை பிரியங்கா சோப்ரா மறுப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணத்தில் மணப்பெண் தோழியாக நடிகை பிரியங்கா சோப்ரா என தகவல்கள் வெளியாகிய நிலையில் அதனை மறுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. #PriyankaChopra
லண்டன்

மே 19 ஆம் தேதி ஹரி- மெர்க்கல் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்த திருமணத்தில் சுமார் 600 விருந்தினர்கள்  கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில், மணப்பெண் மெர்க்கல் தோழியாக முன்னாள் உலக அழகி பிரியங்க சோப்ரா இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதனை பிரியங்க சோப்ரா மறுத்துள்ளார்.

நான் மணப்பெண் தோழி கிடையாது, அது தவறான தகவல் ஆகும். மெர்க்கல் எனக்கு 3 வருடங்களாக தோழியாக இருக்கிறார். அவர் திருமண பந்தத்தில் இணையப்போவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த  திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரது வாழ்க்கையும் மாறவிருக்கிறது என கூறியுள்ளார். பிரியங்கா சோப்ரா தற்போது குவண்டிகோ எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

Priyanka Chopra Responds to Rumors That She Will Be a Bridesmaid for Meghan Markle #PeopleNowhttps://t.co/kK2z0J7Oxtpic.twitter.com/57XLlZnKnO — People (@people) 25 April 2018