வாரிசு நடிகர்கள் பிடியில் சினிமா உலகமா?-காஜல் அகர்வால்

சினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் இருக்கிறது என்றும் தாய் தந்தை யாரேனும் ஒருவர் நடிகராகவோ இயக்குனராகவோ இருந்தால்தான் நிலைக்க முடியும் என்றும் அப்படி இல்லாதவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்றும் பேச்சு பரவி கிடக்கிறது.

Update: 2018-04-30 22:30 GMT
வாரிசு நடிகர்கள் பிடியில் சினிமா உலகமா?-காஜல் அகர்வால்

சினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் இருக்கிறது என்றும் தாய் தந்தை யாரேனும் ஒருவர் நடிகராகவோ இயக்குனராகவோ இருந்தால்தான் நிலைக்க முடியும் என்றும் அப்படி இல்லாதவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்றும் பேச்சு பரவி கிடக்கிறது. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“பிறவியிலேயே யாரும் சினிமா நட்சத்திரம் ஆகிவிட முடியாது. வாரிசு நடிகர்-நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள்.

விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்.

முதல் வாய்ப்பு எளிதாக கிடைத்து இருந்தாலும் உழைப்பால் முன்னேறி பெயர் புகழ் அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வாரிசுகளாக இருப்பது பெரிய பாரம். பெரிய நடிகர்கள் மகன்கள் என்பதால் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக மற்றவர்களை விட அவர்கள் அதிக கஷ்டப்பட வேண்டும்”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்