சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டார் செளந்தர்யா ரஜினிகாந்த்

அமெரிக்காவில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டார். #Rajinikanth
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ளார்.  இமயமலை பயணத்துக்கு முன்பே திட்டமிட்டதுதான் ரஜினியின் தற்போதைய அமெரிக்கப் பயணம். அப்போது, ரஜினிகாந்த் சந்திக்க இருந்த அமெரிக்க மருத்துவர்கள் பிஸியாக இருந்ததால், அந்தப் பயணத்தை தள்ளிவைத்துவிட்டு இமயமலைக்குச் சென்றார். தற்போது மருத்துவர்களை சந்திக்க நேரம் கிடைத்ததை அடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கப் பயணத்தின்போது அவர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது மற்றும் எஸ்கலேட்டரில் செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
The one and only #Kaala from the US #SemmaWeightu 🙌🏻🎉#KaalaFestivalBeginspic.twitter.com/AZ3rJG3CDa— soundarya rajnikanth (@soundaryaarajni) May 2, 2018