சினிமா செய்திகள்
‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல் சாதனை

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - ரூ.5 ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது.

உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது. 5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது.

இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.