சினிமா செய்திகள்
வனவிலங்குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபராக ஆண்ட்ரியா

‘பொட்டு’ என்ற படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும் தற்போது, ‘பொட்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இதில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். இது, ஒரு திகில் படம்.

இந்த படத்தை அடுத்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும் ‘கா’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், நாஞ்சில். இவர் கூறியதாவது:-

“கா என்றால் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால், ‘கா’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.

குற்றப்பின்னணியிலான திகில் படம், இது. உலக அளவில் பேசப்படும் ஒரு கருத்தை அடிப்படையாக கொண்ட கதை. கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். கதாநாயகியை முன்னிலைப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறை களையும், குணாதிசயங்களையும் படம் பிடிக்கும் போட்டோகிராபராக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் இளவரசு, சலீம் கவுஸ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கி அந்தமான், மூணாறு, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடைபெற இருக்கிறது.”