சினிமா செய்திகள்
'குடியரசுத் தலைவருடன் தேசிய விருது பெற்ற சிலர்' - ஏர். ஆர் ரஹ்மான்

'குடியரசுத் தலைவருடன் தேசிய விருது பெற்ற சிலர்'என்ற ஏர். ஆர் ரஹ்மான் பதிவிற்கு வருத்தம்' என பதிவிட்டுள்ளார் ரசூல் பூக்குட்டி.
சென்னை 

 2017-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை செழியனின் 'டூ லெட்' திரைப்படம் பெற்றது.

விருதாளர்களுக்கு நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. 11 பேருக்கு  மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு ஸ்மிருதி இரானி விருது வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டதால் 69 க்கும் மேற்பட்ட விருது பெற்றவர்கள்  விழாவைப் புறக்கணித்தனர்.

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு விழாவிலும் ஒரு மணி நேரம் மட்டுமே கலந்துகொள்வது என்னும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படியே இந்த ஏற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படத்தை 'குடியரசுத் தலைவருடன் தேசிய விருது பெற்ற சிலர்' எனும் கேப்ஷனோடு டுவிட்டரில் பகிர்ந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதில், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, 'சிலர் மட்டுமா? வருத்தம்' என கமென்ட் செய்துள்ளார். மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்டோர் விருது விழாவைப் புறக்கணித்த நிலையில், ரசுல் பூக்குட்டியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Some of us who won last night with the president 🥇 pic.twitter.com/ZB4ODaREtB — A.R.Rahman (@arrahman) 3 May 2018Only some of you! Sad! — resul pookutty (@resulp) 4 May 2018