சினிமா செய்திகள்
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். #Rajinikanth
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த்  கடந்த ஏப் 25-ம் தேதி  அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். அவ்வபோது ரஜினிகாந்த் அமெரிக்காவின் சில வணிகவளாகங்களை  சுற்றிப்பார்ப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்தநிலையில்,  அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மேலும் மே 9ம் தேதி நடைபெறும் ’காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.