சினிமா செய்திகள்
9-ந் தேதி ‘காலா’ படவிழாவில் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்

‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் டைரக்‌ஷனில், ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ள படம், ‘காலா.’
‘காலா’  படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. விழாவில், ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

‘காலா’ படத்தை ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமாகுரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானாபடேகர், சமுத்திரக்கனி, ரவிகாலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

பாடல் வெளியீட்டு விழா நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூப்பில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். தனுசின் ‘உண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிடுகிறது.