சினிமா செய்திகள்
‘விசுவாசம்’ படப்பிடிப்பில் அஜித்குமார்-நயன்தாரா

விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது தடவையாக மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ள ‘விசுவாசம்’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு கடந்த மாதமே படப்பிடிப்பை தொடங்க இருந்தனர். ஆனால் பட அதிபர்கள் ஸ்டிரைக்கால் அது நின்று போனது. நேற்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இதற்காக அஜித்குமார் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். சென்னை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுத்தனர். இசையமைப்பாளர் தமனும் அஜித்துடன் படம் எடுத்துக்கொண்டார். நேற்று படப்பிடிப்பில் அஜித்குமார் கலந்து கொண்டு நடித்தார். வீடுகள், கடைவீதிகளை அரங்குகளாக அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும் பின்னர் மும்பையில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நான்காவது தடவையாக மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கிறார். இது திகில் படமாக தயாராகிறது. நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.