சினிமா செய்திகள்
தனுஷ் ஜோடியாக நடித்தவர்நடிகை சோனம் கபூர் திருமணம்

இந்தி பட உலகில் முன்னணி நடிகையான சோனம் கபூருக்கும் ஆனந்த் அஹூஜாவுக்கும் திருமணம் நடந்தது.
தமிழ், இந்தியில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் சோனம் கபூர். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பியும், இந்தி நடிகருமான அனில்கபூரின் மகள் ஆவார். தற்போது 4 இந்தி படங்களில் நடிக்கிறார்.

சோனம் கபூருக்கும் தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. டெல்லியை சேர்ந்த ஹரிஷ் அஹுஜா ஏற்றுமதி தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியாவின் பெரிய தொழில் அதிபர் ஹரிஷ் அஹூஜாவின் பேரன் ஆவார். மும்பையில் நேற்று மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் சோனம் கபூர் கைகளில் மருதாணி பூசினார்கள். நடன நிகழ்ச்சியும் நடந்தது. மணமகனும் மணமகளும் கைகோர்த்து நடனம் ஆடினார்கள்.

நேற்று காலை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள பங்களாவில் திருமண சடங்குகள் நடந்தன. சோனம் கபூரும், ஆனந்த் அஹுஜாவும் பாரம்பரிய உடைகள் அணிந்து இருந்தார்கள். மலர்களால் அலங்கரித்து விசேஷமாக அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் சோனம் கபூருக்கு ஆனந்த் அஹூஜா தாலி கட்டினார். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஸ்ரீதேவி மகள்கள் ஜான்வி, குஷி, நடிகர்கள் அபிஷேக் பச்சன், சயீப் அலிகான், அமீர்கான், நடிகைகள் கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஷில்பா ஷெட்டி, கரிஷ்மாகபூர் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.