சினிமா செய்திகள்
நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகை அவந்திகா க்வோகர் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இது குறித்து இயக்குனர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
மும்பை

நடிகைகள் பலர் தங்களுக்கு சினிமா துறையில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி வரும் நிலையில்,  மும்பையை சேர்ந்த நடிகையும் மாடலுமான அவந்திகா க்வோகர் நிர்வாண புகைப்படத்தை இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த புகைப்படத்தில் இந்த நடிகையை, யாரும் வற்புறுத்தியோ அல்லது மறைந்திருந்தோ எடுக்க வில்லை அவராகவே முன் வந்து போஸ் குடுத்தப் புகைப்படம் என நன்றாக தெரிகிறது.

இதனால் இது குறித்து அவரிடமே கேட்டதற்கு, "தான் ஒரு வெப் சீரியலுக்காக  நெட் பிலிக்ஸ் ஒரு போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அப்போது இது போன்ற சில போட்டோ எடுக்கப் பட்டது உண்மைதான். ஆனால் தற்போது தன்னுடைய அனுமதி இன்றி அந்த ஹாலிவுட் இயக்குனர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் இயக்குனர். அவர் எடுக்கப்பட்ட  3-4 நாட்களுக்கு பிறகு தனது தொலைபேசியிலிருந்து படங்களை நீக்கிவிட்டதாகவும் கூறினார்  ஆனால் சில வலைத்தளங்களில் இதை பார்த்தேன். நான் இப்போது பாலிவுட் படத்துக்காக லக்னோவில் படபிடிப்பில் இருக்கிறேன். இந்த பிரச்சினையை தான் இப்படியே விடப்போவதில்லை என்றும், சட்ட ரீதியாக அவரை அணுக உள்ளதாகவும்   தெரிவித்துள்ளார் அவந்திகா.