சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்தது

கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்துள்ளது.
கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென வாய்ப்புகள் குவிந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். முன்னாள் கதாநாயகி மேனகா மகளான இவர் 2015-ல் வெளிவந்த இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். இதில் நடிக்க அவருக்கு சில லட்சங்களே சம்பளமாக கிடைத்தது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படத்தின் வெற்றி அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடரி, ரெமோ ஆகிய படங்களில் வந்த அவர் பின்னர் பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியானார். அதன்பிறகு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்போது மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநாதி பெயர்களில் தயாராகி உள்ள படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்துள்ளார். விஷாலின் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 படங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் விஜய் ஜோடியாக நடிக்கிறார். படங்கள் குவிவதால் இதுவரை ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் அதை ரூ.1.50 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சோர்ந்து போன கீர்த்தி சுரேஷ்!
சண்டக்கோழி-2 படத்தில் தன்னை விட, வரலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கீர்த்தி சுரேஷ் வருத்தப்படுகிறாராம்.
2. கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து
இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து தயாராக இருக்கிறது.
3. “முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” -கீர்த்தி சுரேஷ்
முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
4. சாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி
‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பின்னர் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார். #Mahanati #Rajamouli #KeerthySuresh #DulquerSalmaan