சினிமா செய்திகள்
விருது வழங்கும் விழாவில்கவர்ச்சி உடையில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா வந்தனர்.
நடிகைகள் வழியாகத்தான் புதிய பேஷன்கள் பரவுகின்றன. ஆடை அலங்கார அணிவகுப்புகள், விருது வழங்கும் விழாக்கள், பட நிகழ்ச்சிகளுக்கு பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பேஷன் உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுக்கின்றனர். இந்த உடைகளுக்காக பல லட்சங்கள் செலவு ஆவதாகவும் அவற்றை விளம்பர நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

சமீபகாலமாக இந்தி நடிகைகள் ஹாலிவுட் பட விழாக்களுக்கு சென்று விதவிதமான பேஷன் உடைகளில் கலக்குகிறார்கள். ஐஸ்வர்யாராய் என்ன உடை அணிந்து வருகிறார் என்பதை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்போது நியூயார்க்கில் நடந்த சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தி நடிகைகள் தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் கலந்துகொண்டனர்.

இருவரும் கவர்ச்சி உடையில் தோன்றினார்கள். அவர்களை போட்டோகிராபர்கள் விதவிதமாக படம் எடுத்து தள்ளினார்கள். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.