சினிமா செய்திகள்
நடிகர் சிவாஜிதேவுடன் காதலா? -நடிகை சுஜா வாருணி

அதிக தமிழ் படங்களில் நடித்துள்ள சுஜா வாருணி. மாயாவி, கஸ்தூரி மான், இந்திரலோகத்தில் நா.அழகப்பன், உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களில் வந்தார்.
அதிக தமிழ் படங்களில் நடித்துள்ள சுஜா வாருணி. மாயாவி, கஸ்தூரி மான், இந்திரலோகத்தில் நா.அழகப்பன், உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களில் வந்தார். சில படங்களில் கவுரவ வேடத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தோன்றினார். சுஜா வாருணிக்கும், சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமார் மகனுமான சிவாஜிதேவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவியது. சிவாஜி தேவ் சிங்க குட்டி படத்தில் கதாநாயகனாக நடித்தார். புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவாஜிதேவும், சுஜாவாருணியும் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர். அந்த படம் சமூக வலைதளத்தில் பரவியது. இதை வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை சுஜா வாருணி மறுத்துள்ளார்.

“எனக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. மற்றவர்களை பாதிக்கும் தவறான வதந்தியை பரப்ப வேண்டாம். நாங்கள் இருவரும் சுப்ரபாதம் தரிசனத்துக்காக திருப்பதி சென்று இருந்தோம். எனக்கு திருமணம் முடிவானால் அதுகுறித்து நானே அறிவிப்பேன்”.

இவ்வாறு சுஜா வாருணி கூறினார்.