சினிமா செய்திகள்
பட வாய்ப்பு குறைவு பற்றி நடிகை தமன்னா

28 வயதாகும் தமன்னா நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன.
28 வயதாகும் தமன்னா நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் சில மாதங்களாக இறங்கிய இவரது மார்க்கெட் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது. பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தமன்னா சொல்கிறார்:-

“நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று யாராவது சொன்னால்தான் ஞாபத்துக்கே வருகிறது. அந்த அளவுக்கு காலங்கள் ஓடி விட்டது. 2005-ல் எனது முதல் தெலுங்கு படம் வெளிவந்தது. இப்போதும் கதாநாயகியாக தொடர்ந்து நடிப்பது உற்சாகம் தருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி படங்களிலும் நடித்து விட்டேன். எல்லா படங்களுமே ஏதோ ஒரு விஷயத்தில் பெயர் வாங்கி கொடுத்தன. தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு அதிக ஆதரவை தந்தன. தெலுங்கு பட உலகில் கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் தொடர முடியும். அதன்பிறகு ஒதுக்கிவிடுவார்கள்.

ஆனால் சவுந்தர்யாவுக்கு பிறகு அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோரும் நானும் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களை தேர்வு செய்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

தெலுங்கில் படங்கள் நன்றாக ஓடாத காலங்களில் தமிழில் சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம் என்று நல்ல படங்கள் அமைந்தன. மூத்த கதாநாயகர்கள் புதுமுக கதாநாயகிகளுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டுவதால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அத தற்காலிகமான பின்னடைவுதான்.

இவ்வாறு தமன்னா கூறினார்.