சினிமா செய்திகள்
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி

அரவிந்த்சாமி, நடிப்பில் இன்று வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்துள்ளார். #Arvindasamy
சென்னை 

இன்று விஷாலின் 'இரும்புத்திரை', கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் 'நடிகையர் திலகம்', அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'  படத்தை தவிர அனைத்தும் ரிலீஸ் ஆகிவிட்டன 

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று, பத்திரிகையாளர்களுக்கான ப்ரிவியூ ஷோவும் திரையிடப்பட்டது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது தயாரிப்பு நிர்வாகம்.

இது தொடர்பாக அரவிந்த்சாமி டுவீட் செய்துள்ளார். "அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது என உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. மீண்டும் இந்தப் படம் தள்ளிப்போகும் எதிர்பார்க்கவில்லை. ரிலீஸ் தள்ளிப்போனது வருத்தமளிக்கிறது.

எப்போதும் பட தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். ரிலீஸுக்காக காத்திருந்தவர்களை தவறாக வழிநடத்திவிட்டேனோ என நினைக்கிறேன். இனிமேல் ரிலீஸ் தேதியை நான் பதிவிட மாட்டேன். இன்று வெளியாகும் மற்ற படங்களை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை தயாரிப்பு நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. குறைவான தியேட்டர்கள் ஒப்பந்தமானதால் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.