சினிமா செய்திகள்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்

கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால் நடிக்க உள்ளார். #KVAnand #Surya #MohanLal
சூர்யாவுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் இந்த வார தொடக்கத்தில் இயக்குனரை சந்தித்ததாகவும், அதில் ஒரு பகுதியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் மோகன்லால் ரசிகர்களுக்கு இது சுவராஸ்யமான கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருவரின் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் காட்சியமைப்பு இருக்கும் என இயக்குனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அயன், மாற்றான் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கே.வி. ஆனந்துடன் இணைகிறார். மேலும் படத்தின் 4 பாடல்கள் தயாராகி விட்டதாகதாகவும், டெல்லி, ஹைதராபாத் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா தயாரிக்கும் இப்படத்துக்கு, எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து இயக்குனர் கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி மற்றும் கலை - கிரண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்திலும்,மலையாளத்தில் விஷாலுடனும் மோகன்லால் நடித்துள்ளார்.