சினிமா செய்திகள்
கமல் பாராட்டியது மகிழ்ச்சி -நடிகை கீர்த்தி சுரேஷ்

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் படமாகி வெளிவந்துள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் படமாகி வெளிவந்துள்ளது. சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து மாளிகை போன்ற பங்களா கட்டி செல்வ செழிப்பில் வாழ்ந்த சாவித்திரி கடைசி காலத்தில் சொந்த படம் எடுத்து சொத்துக்களை இழந்து கஷ்டப்பட்டதையும் ஜெமினிகணேசனை திருமணம் செய்து அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மதுவுக்கு அடிமையாகி கோமாவில் சிக்கி இறந்ததையும் படத்தில் காட்சி படுத்தி உள்ளனர்.

இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு நடிகர் நடிகைகளுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷை பாராட்டி உள்ளார். சாவித்திரியின் களத்தூர் கண்ணம்மா படத்தில்தான் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கமல்ஹாசனிடம் பாராட்டும், ஆசிர்வாதமும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவருக்கு நன்றி” என்று தெரிவித்து உள்ளார்.