சினிமா செய்திகள்
“பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் சாதிப்பார்கள்” -நடிகர் விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை உள்பட பல படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி தற்போது ‘காளி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை உள்பட பல படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி தற்போது ‘காளி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை கிருத்திகா உதயநிதி டைரக்டு செய்துள்ளார். பாத்திமா தயாரித்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி அளித்த பேட்டி வருமாறு:-

“காளி படத்தில் 4 தோற்றங்களில் வருகிறேன். பல வேடங்களில் நான் நடிக்கிறேனா? என்பது சஸ்பென்ஸ். இந்த படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி திறமையானவர். அவர் என்னிடம் சொன்ன 3 கதைகள் மிகவும் பிடித்தது. இறுதியில் காளி கதையை தேர்வு செய்து நடித்தேன். மற்ற கதைகளில் வேறு நடிகர்கள் நடிக்க முன்வரலாம்.

பெண்களுக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அதற்கு உதாரணமாக கிருத்திகா இருக்கிறார். காளி படத்தில் அஞ்சலி, சுனைனா, சில்பா, அம்ரிதா என்று 4 கதாநாயகிகள் உள்ளனர். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

நான் இதற்கு முன்பு நடித்த படங்களில் இருந்து காளி கதை வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.”

இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.