சினிமா செய்திகள்
சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்; அமிதாப்பச்சன் நெகிழ்ச்சி

சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான் என அமிதாப்பச்சன் கூறினார்.
மும்பை,

நடிகர் அமிதாப்பச்சன், 75 வயதிலும் தீவிர சமூக ஊடக ஆர்வலர். அவற்றை தவறாக பயன்படுத்தி, தன்னைப்பற்றிய பதிவுகள் வெளிவந்தாலும் அது தனது மேம்பாட்டுக்கு உதவுவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இது பற்றி அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-

சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த எனக்கு நேரம் இல்லை. என் வேலைக்குத்தான் எனக்கு நேரம் இருக்கிறது. இவற்றில் என்னை தவறாக பதிவு செய்வதை கண்டுகொள்வதற்கு எனக்கு நேரம் இல்லை. உள்ளபடியே இதை நான் நேசிக்கிறேன். என் நல்லதுக்கு இது தூண்டுகிறது.

நான் பெருமைப்பட, என்னை மேம்படுத்திக்கொள்ள, என் நடத்தைக்கு, நான் நின்று கொள்வதற்கு, என் கண்ணியத்துக்கு இது தூண்டுகோலாய் அமைகிறது. இதில் என்னைப்பற்றி தவறாக சொல்வது, இதற்கெல்லாம் வழிநடத்தும் என்றால் நான் அவற்றை பதிவு செய்கிறவர்களுக்கு நன்றிக்கடன்பட்டு உள்ளேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.