சினிமா செய்திகள்
பிரபல இயக்குனர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி

பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா, அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மும்பை

தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.

மேலும் நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

இந்நிலையில் இவர், மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணையில் சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 'ராஜசிம்ஹா' மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.