சினிமா செய்திகள்
சோனம் கபூர் அணிந்துள்ள ரூ.90 லட்சம் மோதிரம்

தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் சோனம்கபூர்.
சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். விரைவில் கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார்.

இந்த வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி என்கின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடைய வீட்டின் மதிப்பு ரூ.160 கோடிதான். தொழில் அதிபரை மணந்துள்ள இன்னொரு நடிகையான ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டிலும், கங்கனா ரணாவத் ரூ.30 கோடி மதிப்பு கொண்ட வீட்டிலும் வசிக்கின்றனர். சோனம்கபூர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள்.

இந்த நிலையில் கூடுதல் தகவலாக சோனம் கபூர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு பிற இந்தி நடிகைகள் பொறாமையால் வாய்பிளந்து நிற்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்புதான் சோனம் கபூருக்கு திருமணம் நடந்தது. அப்போது கணவர் ஆனந்த் அஹுஜா இந்த விலை உயர்ந்த மோதிரத்தை அவரது கைவிரலில் அணிவித்தார் என்கின்றனர்.