சினிமா செய்திகள்
‘கேன்ஸ்’ படவிழாவில், ஸ்ரீதேவிக்கு சிறப்பு விருது

கேன்ஸ் படவிழாவில், ஸ்ரீதேவிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு, ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாம்’ படம், அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதை அவருடைய குடும்பத்தினர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிலையில், வருடந்தோறும் நடைபெறும் ‘கேன்ஸ்’ படவிழாவில், ‘மாம்’ படம் திரையிடப்பட்டது. அந்த படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. விழாவில், ஸ்ரீதேவிக்கு சிறப்பு விருது வழங்கப்படுவதாக அறிவித்தார்கள். அவருக்கு கிடைத்த வரவேற்பும், கவுரவமும் பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.

‘கேன்ஸ் பட விழா, வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் விருதுக்குப்பின், திரையுலகினரால் மிகவும் மதிக்கப்படும் விருதாக இது கருதப்படுகிறது.