சினிமா செய்திகள்
“நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்”- உதயநிதி பேச்சு

நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து தேசிய விருது பெற்றவர், தினேஷ். இவர், ‘ஒரு குப்பை கதை’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ‘வழக்கு எண்’ பட புகழ் மனிஷா நடித்து இருக்கிறார். காளி ரங்கசாமி டைரக்‌ஷனில், அஸ்லம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், டைரக்டர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனுராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

“விஜய் நடித்த குருவி படம் மூலம் தயாரிப்பில் இறங்கி, இதோ பத்து வருடங்கள் வெற்றிகரமாக ஓடிவிட்டன. இதில் நல்ல படங்கள், சராசரி படங்கள், மட்டமான படங்களை கூட கொடுத்து இருக்கிறோம். இந்த படம், ‘மைனா’ போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படம்.

நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து என் படங்களில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். என்னை மாதிரி சில பேருக்கு நடனம் சொல்லிக் கொடுத்து, “என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்க”ன்னு மனதுக்குள் நினைத்துக் கொண்டு அந்த கோபத்தில், நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார் என்று நினைக்கிறேன். தப்பான படங்கள் கொடுத்தால், திட்டுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பையும், ஆதரவையும் கொடுங்கள்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.