சினிமா செய்திகள்
உயிரைப் பறிக்கும் கட் அவுட்கள் தனக்கு தேவையில்லை- நடிகர் சிம்பு

உயிரைப் பறிக்கும் கட் அவுட்கள் தனக்கு தேவையில்லை என நடிகர் சிம்பு கூறி உள்ளார். #ActorSimbu
சென்னை

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிம்புவின் ரசிகர் மதன், ‘பேனர்’ வைத்த தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் உயிர் பிரிந்த 10-வது நாள் சடங்கு நடந்தது.

தனது ரசிகர் மதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிம்பு, நினைவஞ்சலி ‘போஸ்டர்’களை ஒட்டினார். அதைப்பார்த்து சிம்பு ரசிகர்கள் நெகிழ்ந்து போய் கண்கலங்கினார்கள்.

மேலும் ரசிகர்கள் யாரும்  இனி எனக்கு கட் அவுட்கள்  வைக்கவேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். உயிரைப் பறிக்கும் கட் அவுட்கள் தனக்கு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.