சினிமா செய்திகள்
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.
சென்னை

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நெருப்பு பறக்க எழுதிய மெர்க்குரிப் பூ அவர். சிறந்த எழுத்தாளர். நானும் அவரும் நிறைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். அவரை சினிமாவில் வந்து பணியாற்றுமாறு நான்தான் முதலில் வற்புறுத்தினேன். அவர் பின்னர் பாலசந்தர் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் பணியாற்றினார். நானும் அவரும் சேர்ந்து கூட ஒரு கதை எழுதினோம் இவ்வாறு கமல் தெரிவித்தார் .