சினிமா செய்திகள்
“புடவைதான் பெண்களுக்கு அழகு” -நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

இலங்கையில் இருந்து வந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
இலங்கையில் இருந்து வந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். மேற்கத்திய உடைகளுக்கு மாறும் இந்த காலகட்டத்தில் புடவைதான் பெண்களுக்கு அழகு என்கிறார் ஜாக்குலின். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“எனக்கு புடவை என்றால் ரொம்ப இஷ்டம். புடவையில்தான் நான் அழகாக இருக்கிறேன். படவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு புடவையில்தான் செல்கிறேன். சமீபத்தில் நடந்த சோனம்கபூர் திருமணத்துக்கு புடவை கட்டி சென்றேன். அதை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். பெண்களுக்கு புடவைதான் சவுகரியமான அழகான உடை.

உங்களுக்கு பிடித்த உடையை சொல்லுங்கள் என்று கேட்டால் முதல் இடம் புடவைக்குத்தான். எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. கதைகளும் அதிகம் கேட்கிறேன். எந்த டைரக்டராவது உங்களுக்கு புடவை கட்டிக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரம் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்வேன். புடவையில் நடிக்க விரும்புகிறேன். புடவையில் இருக்கும் அழகு வேறு எந்த உடையிலும் கிடையாது.”

இவ்வாறு ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறினார்.