சினிமா செய்திகள்
ரமலானை முன்னிட்டு பாகிஸ்தானில் இந்திய சினிமா படங்களுக்கு தற்காலிக தடை

அடுத்த மாதம் ஈத் விடுமுறை நாட்களில் இந்திய திரைப்படங்கள் திரையிட பாகிஸ்தான் தற்காலிக தடை விதித்துள்ளது.
கராச்சி

பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுவது  ஈத் விடுமுறை நாட்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும்  ஈத் விடுமுறைக்கு 2 வாரங்களுக்கு பிறகும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானிய திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த தடையின் மூலம்  பாகிஸ்தான் முழுவதும்   ஈத் விடுமுறை நாட்களில் இந்திய திரைப்படங்களும் திரையிடப்படாது.

இந்த  நான்கு நாட்களுக்கு பொதுவாக  புதிய பாகிஸ்தானிய, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கான மிகப்பெரிய வணிகம் நடைபெறும்.

ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் இது ஈடி-உல்-ஆஹா விடுமுறை நாட்களுக்கும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களால் கடுமையான  பாதிப்பை  எதிர்கொள்வதாகவும், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான திரை அரங்குகள் காரணமாக அவர்கள் நல்ல வியாபாரம்  செய்ய இயலாது என்றும் சில சந்தர்ப்பங்களில் படங்களில் செய்த முதலீடு நஷ்டம் அடைவதாகவும்  கூறி வந்தனர்.