சினிமா செய்திகள்
புனிதமாக கருதப்படும் தாலியை கையில் கட்டிக்கொண்ட சோனம் கபூர்

புனிதமாக கருதப்படும் தாலியை கையில் சோனம் கபூர் கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்து உள்ளார்.
மும்பை,

இந்தியில் முன்னணி நடிகையாக சோனம் கபூர் வலம் வருகிறார். சமீபத்தில் ஆனந்த் அகுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.  சோனம் கபூருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகும் நிலையில், கழுத்தில் தான் அணிந்திருந்த தாலியை கழற்றி கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்துள்ளார். 

இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியானதை அடுத்து கழுத்தில் அணிய வேண்டிய தாலியை கையில் அணிவதா? இது கலாச்சார சீர்கேடுக்க வழிவகுக்கும் என்று சமூகதள வாசிகள் சோனம் கபூருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.