சினிமா செய்திகள்
தூத்துக்குடி விவகாரத்தில், ரஜினி கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை - விஷால்

தூத்துக்குடி விவகாரத்தில், ரஜினி கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். #Kaala #Vishal #Rajinikanth #ThoothukudiIncident
சென்னை,

எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என ரஜினிகாந்த் கூறினார். இந்தநிலையில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது:
 
காலா திரைப்படம் தடை குறித்து கர்நாடக முதல்வரிடம் பேச தயாராக உள்ளோம். தூத்துக்குடி விவகாரத்தில், ரஜினி கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் வாய்திறந்து பேச வேண்டும். உளவுத்துறையின் குறைபாடே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணம். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சங்கம் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.