சினிமா செய்திகள்
தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகருடன் பிரியங்கா சோப்ரா நெருக்கம்

தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகருடன் பிரியங்கா சோப்ரா நெருக்கம்
தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அமெரிக்காவில் குவான்டிகோ என்ற டெலிவிஷன் தொடரில் நடித்து ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்துள்ளன. தன்னுடன் நடித்த சில இந்தி நடிகர்களுடன் பிரியங்கா சோப்ராவை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இப்போது பிரபல அமெரிக்க இளம் பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனாஸ் 25 வயது உடையவர். சில நாட்களாக இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. படகு சவாரி செய்வது, நண்பர்களுடன் விருந்து சாப்பிடுவது போன்ற படங்களும் வந்தன.

இப்போது பிரியங்காவும் நிக் ஜோனாசும் நியூயார்க்கில் நடந்த கால்பந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளனர். இருவரும் ஸ்டேடியத்துக்கு ஜோடியாக வந்த வீடியோ படம் இணையதளத்தில் பரவி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பான பேச்சாக உள்ளது.

சமீப காலமாக இங்குள்ள நடிகைகள் பலர் வெளிநாட்டினர் மீது காதல் வயப்படுவதும் சேர்ந்து வாழ்வதும் அதிகரித்து வருகிறது.