சினிமா செய்திகள்
பாலியல் சர்ச்சையில் சிக்கியவர்: மீண்டும் நடிக்க விரும்பும் சுவேதா பாசு

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சுவேதா பாசு மீண்டும் நடிக்க விரும்பம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்துள்ள சுவேதா பாசு தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தியிலும் நடித்துள்ளார். 2014-ல் சுவேதா பாசு பாலியல் புகாரில் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு சுவேதா பாசுவுக்கு படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு பட உலகினரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக இயக்குனர், தயாரிப்பாளர்களை அணுகி வாய்ப்பு தேடுகிறார். விரைவில் புதிய படத்துக்கு அவர் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.வி. தொடரை பிரபலப்படுத்த ஐதராபாத் வந்த சுவேதாபாசு இதுகுறித்து கூறும்போது, “நான் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.