சினிமா செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் பிரபல நடிகரின் தம்பி கைது

ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை

ஐபிஎல் 11வது சீசன் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10வது சீசனின்போது, சூதாட்டம் நடந்தது தெரியவந்ததை அடுத்து, அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி போலீசார் சிலரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ஜலான் என்பவரை கைது செய்தனர். இவர் தான் இந்த சூதாட்ட கும்பலில்  முக்கியமானவர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பதும் வெளிநாடுகளில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

மேலும் ஜலானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான், பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கானின் தம்பி ஆவார். அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஜலான் கூறியதை அடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்பாஸ் கானுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.