80 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: ஹார்வி வெயின் ஸ்டீன் மீதான பாலியல் புகார் படமாகிறது

80 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹார்வி வெயின் ஸ்டீன் மீதான பாலியல் புகார் படமாக்கப்பட உள்ளது.

Update: 2018-06-03 22:30 GMT
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் 30 ஆண்டுகளாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் கிளம்பியது. பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, காரா டெலவிங்னி, கைனத் பால்ட்ரோ உள்பட 80 நடிகைகளுக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் பாலியல் தொல்லைகளில் சிக்கிய மற்ற நடிகைகளும் புகார் பதிவு செய்து வருகிறார்கள். ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 2 பெண்கள் அளித்த புகார் அடிப்படையில் அவரை நியூ யார்க் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் தொல்லையை மையமாக வைத்து திகில் படம் ஹாலிவுட்டில் தயாராகிறது. இந்த படத்தை பிரையன் தே பால்மா டைரக்டு செய்கிறார். இவர் மிஷன் இம்பாசிபிள், த அண்டச்சப்பள்ஸ், மிஷன் டு மார்ஸ் உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர். அவர் கூறும்போது, “ஹார்வி வெயின்ஸ்டீன் கதைகளை பல வருடங்களாக கேட்டு இருக்கிறேன். அதை மையமாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்