சினிமா செய்திகள்
ஆன்மிக அரசியல் என்றால் என்ன? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல் அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்தார். #Sathyaraj #Rajinikanth
சென்னை

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும்  மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகும் போதுதான் புரட்சி வெடிக்கும் என்றும், நாடு சுடுகாடு ஆவதற்கு புரட்சி வெடிக்காது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

மேலும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என விளக்கம் அளித்தார்.   

ரஜினிகாந்த்துக்கு நடிகர் சத்யராஜ் இந்த விழாவில் நேரடியாக அதற்கு பதில் கூறியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கு முன்னதாக நடைபெற்ற பல போராட்டங்களில் நடிகர் சத்யராஜ், ரஜினியை இவ்வாறு நேராகவே தாக்கி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.