சினிமா செய்திகள்
சேர்ந்து வாழ்ந்த காதலியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய பிரபல நடிகர்

காதலியை தாக்கியதாக இந்தி நடிகர் அர்மான் கோலி மீது மும்பை சாந்தாகுரூஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அர்மான் கோலி தன்னை தாக்கியதாக நீரு ரந்தாவா புகார் கூறி உள்ளார்.
மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி பிக்பாஸ்  நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.  நடிகர் அர்மான் கோலியும்  மாடலுமான நீரு ரந்தாவா  இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை தொடர்பாக தகராறு நடந்து உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் அர்மான் ரந்தாவை தலைமுடியை பிடித்து அடித்து தாக்கி  உள்ளார். இதில் படுகாயம் அடைந்த  அவர் கோகிலபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ரந்தாவா  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்மான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.