சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்?

கருப்பு தாடி, மீசையுடன் புதிய தோற்றத்தில் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தயாராகி உள்ளார்.
இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை இமயமலை பகுதியில் நடத்த உள்ளனர். இது ரஜினிக்கு பிடித்த இடம். சமீபத்தில்தான் அங்கு சென்று சாமியார்களை சந்தித்து தியானம் செய்துவிட்டு வந்தார். மீண்டும் படப்பிடிப்புக்காக அங்கு செல்லும் உற்சாகத்தில் இருக்கிறார். 30 நாட்கள் அங்கு தங்குவார் என்று தெரிகிறது.

இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளனர். கபாலி, காலாவில் தாதாவாக நடித்துவிட்டதால் புதிய படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்கிறார். இமயமலையில் படப்பிடிப்புகள் நடப்பதால் கதையில் ஆன்மிக விஷயங்கள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்போது நரைத்த தாடியை கருப்பாக்கி இருக்கிறார். இது புதிய படத்துக்கான அவரது தோற்றமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பேசுகிறார்கள். முந்தைய படங்களில் நரைத்த தாடி, தலைமுடியில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.