சினிமா செய்திகள்
அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டாரா? ஸ்ரீதேவி மகளை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டாரா? என ஸ்ரீதேவி மகளை ரசிகர்கள் கிண்டல் செய்து உள்ளனர்.
மும்பை

நடிகை ஸ்ரீதேவியின் மகள் எது செய்தாலும் சென்சேஷன் ஆகி விடுகிறது. அவர் ஜிம் போவதில் இருந்து அப்பாவுடன் வெளியில் டின்னர் செல்வது வரை அவரது புகைப்படங்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.

ஓட்டல், தியேட்டர்களுக்கு சென்றாலும் ஜான்வியை பார்க்க கூட்டம் மொய்க்கிறது. ஒரு உணவகத்துக்கு சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அதே நேரம் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி கவர்ச்சி உடை அணிந்து வருவது என அவரது செய்து சென்சேஷன்  செய்தியாகி விடுகிறது.

சமீபத்தில் ஜான்வி வித்யாசமான உடையில் வந்த ஒரு புகைப்படம் டிரெண்ட் ஆனது. அதை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வந்தனர் ரசிகர்கள்.

அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டார் போலிருக்கிறது என சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இது பற்றி ஒரு பிரபல பாலிவுட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சியான ஜான்வியின் அண்ணன் நடிகர் அர்ஜுன் கபூர் டுவிட்டரில் அந்த மீடியாவை திட்டியுள்ளார்.