சினிமா செய்திகள்
கூடுதல் கட்டணம் காலா படத்தை திரையிட 2 தியேட்டர்கள் மறுப்புதயாரிப்பு நிறுவனம் பதில்

கூடுதல் கட்டணம் தொடர்பாக காலா படத்தை திரையிட சென்னையில் 2 தியேட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்து உள்ளது. #Kaala
சென்னை

திரையரங்கின் கட்டுப்பாடு விதிக்கு அப்பாற்பட்டு டிக்கட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலா விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறியதாகவும், பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் கமலா திரையரங்கு தரப்பில் கூறபட்டது. 

திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் என  கமலா திரையரங்கின் மேலாளர் கோபி கூறி இருந்தார்.

இந்த நிலையில் காலா தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில்  அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலா படத்தை கமலா, உதயம் தியேட்டர்களில் வெளியிட கூடுதல் பணம் கேட்கவில்லை; கூடுதல் பணம் கேட்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. 

மற்ற தியேட்டர்கள் ஒத்துக்கொண்ட விதிமுறைகளை கமலாவும், உதயமும் ஏற்கவில்லை இவ்வாறு கூறி உள்ளது.

Kamala & Udhayam theaters have not expressed their consent to the similar terms that's been agreed by other cinemas. News going around saying huge demands put forth is absolutely false & baseless.#Kaala — Wunderbar Films (@wunderbarfilms) June 6, 2018