சினிமா செய்திகள்
உடல் எடையை குறைத்த ஹன்சிகா

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அனுஷ்காவுக்கு எடை கூடியதால் படங்கள் குறைந்துள்ளன.
நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அனுஷ்காவுக்கு எடை கூடியதால் படங்கள் குறைந்துள்ளன. இளம் நடிகர்கள் அவருடன் ஜோடி சேர தயங்குகிறார்கள். இதனால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளார். ஹன்சிகாவுக்கும் சமீபத்தில் உடல் எடை போட்டது. எடையை குறைக்கும்படி தோழிகள் வற்புறுத்தினர்.

இதனால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் என்று எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். எடை குறைந்து ஒல்லியாக மாறிய ஹன்சிகாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹன்சிகாவுக்கு கடந்த வருடம் போகன் படம் திரைக்கு வந்தது. 2 தெலுங்கு படங்கள் மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து இருந்தார்.

தற்போது துப்பாக்கி முனை என்ற படத்திலும், அதர்வாவுடன் இன்னும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். அவர்களுக்கு உணவு, படிப்பு செலவுகளை கவனித்துக்கொள்கிறார். ஆதரவற்ற முதியோர்களுக்கு காப்பகம் கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்.