சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி மகள் உடையை கேலி செய்த ரசிகர்கள்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி அணிந்து சர்ச்சையை ஏற்படுத்திய உடை. மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி வட இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி அணிந்து சர்ச்சையை ஏற்படுத்திய உடை.
மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி வட இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள தடக் இந்தி படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்கு முன்பாகவே முன்னணி கதாநாயகிகளுக்கு இணையான முக்கியத்துவம் அவருக்கு கிடைத்துள்ளது. அவரது படங்களை இணையதளங்களில் தேடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.

ஓட்டல், தியேட்டர்களுக்கு சென்றாலும் ஜான்வியை பார்க்க கூட்டம் மொய்க்கிறது. ஒரு உணவகத்துக்கு சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அதே நேரம் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி கவர்ச்சி உடை அணிந்து வருவது விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அரை குறை கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டார்.

அந்த படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. அதைப் பார்த்த ரசிகர்கள் ஜான்வி அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டார் என்று கேலி செய்து கருத்துகள் பதிவிட்டனர். போனிகபூரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூருக்கு இந்த கேலிகள் ஆத்திரத்தை ஏற்படுத்த டுவிட்டரில் அவர்களை திட்டினார்.