சினிமா செய்திகள்
சமூக வலைத்தள தொடர்புகளை விரும்பாத அனுஷ்கா

நடிகர்-நடிகைகளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அத்தியாவசியமாகி விட்டன.
நடிகர்-நடிகைகளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அத்தியாவசியமாகி விட்டன. நடிக்கும் படங்கள் சம்பந்தமான விவரங்களையும், தனது புகைப்படங்களையும் அவற்றில் பகிர்ந்து வருகிறார்கள். சமூக, அரசியல் கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள். ஆனால் நடிகை அனுஷ்கா மட்டும் சமூக வலைத்தளங்களில் இருந்து தள்ளியே இருக்கிறார். அதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-

“இது, இன்டர்நெட் உலகம் என்பதும், சமூக வலைத்தள பயன்பாடுகள் அதிகம் உள்ளது என்பதும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் எனக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் விருப்பம் இல்லை. அறிமுகம் இல்லாதவர்களுடன் டுவிட்டர், பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்படுத்திக்கொள்வதையும், என்னுடையை விஷயங்களை அவர்களுக்கு தெரிவிப்பதையும், அவர்களை பின்தொடர்வதையும் வெறுக்கிறேன்.

எனக்கு யாரிடமேனும் பேசவேண்டும் என்று தோன்றினால் அவர்களை நேரில் அழைத்தோ அல்லது அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றோதான் பேசுவேன். சமூக வலைத்தளம் வழியாக மற்றவர்களுடன் உறவை நீடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.