சினிமா செய்திகள்
“நான் படத்தில் நடிப்பேனா, என்று தெரியவில்லை”நடிகர் சிம்புவின் பரபரப்பு வீடியோ

நடிகர் சிம்பு ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது சினிமா வாழ்க்கை குறித்து பரபரப்பாக வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு தனது சினிமா வாழ்க்கை குறித்து பரபரப்பாக வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு கூறியிருப்பதாவது:-

“செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. எனது முந்தைய படங்கள் நன்றாக போகவில்லை என்ற நேரத்தில் இந்த படத்தை அவர் கொடுத்தார். பொதுவாக என்மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நான் என் வேலையை மதிப்பதில்லை என்று சிலர் சொல்கின்றனர்.

நான் சினிமாவை காதலிக்கிறேன். சினிமாவை தவிர ஏதும் தெரியாது. நான் பிறந்ததில் இருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். நான் நேரத்துக்கு சூட்டிங் செல்வது இல்லை என்று கூறுகிறார்கள். நான் வேண்டும் என்றே அப்படி செய்வது இல்லை. நான் அப்படித்தான் வளர்ந்தேன். அதனால் சினிமாவை மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. ஒரு ரோபோ மாதிரி என்னால் இருக்க முடியாது.

என்னால் மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் சுயநலமாக இருக்க மாட்டேன். என்மீது தவறு இருந்தால் மாற்றிக்கொள்வேன். மன்னிப்பும் கேட்பேன். ஆனால் செய்யாத தவறுக்கு பழிபோட்டால் மன்னிப்பு கேட்க மாட்டேன். இனி நான் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று கூட தெரியவில்லை. ஆனால் உங்களிடம் இதையெல்லாம் பேச விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆர்., ரஜினி மாதிரி ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர்களாகவே ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. ரஜினிக்கு பிறகு அடுத்து யார் வரவேண்டும் என்பதை இறைவன் மூலமாக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் திமிர் பிடித்தவன் அல்ல. என்னை ரசிகர்கள் புரிந்து வைத்துள்ளனர். எங்கிருந்து வந்தோமோ அங்கே போவதுதான் வாழ்க்கை. பணம் புகழ் எல்லாம் எனக்கு கிடைத்து விட்டது. என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.”

இவ்வாறு சிம்பு இடையிடையே கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினார்.